ஐபிஎல்: மும்பைக்கு சென்னை அணி 170 ரன்கள் இலக்கு

புனே:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், – மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கிளேனகன் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் எடுத்தது.

5-வது ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார். தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் மந்தமாக விளையாடினர். இறுதியில் 5 விக்கெட்களை இழந்து சென்னை அணி 169 ரன்களை எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.