ஐபிஎல்: சென்னை அணி 204 ரன் குவிப்பு….வாட்சன் சதம்

புனே:

ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வாட்சன் சதம் அடித்ததை தொடர்ந்து சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது.

ஐபிஎன் கிரிக்கெட் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. புனேயில் நடக்குமு இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பவுலிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. வாட்சன் 51வது பந்தில் சதம் அடித்தார். 106 ரன்கள் எடுத்த நிலையில் இவர் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.