விளையாட்டுகளில் உலகிலேயே அதிக அளவு பணத்தை அள்ளுவது ஐபிஎல் வீரர்களே…! ஆய்வில் தகவல்

லகம் முழுவதும் விளையாடி வரும் விளையாட்டு வீரர்களிலேயே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களே அதிக அளவிலான சம்பளம் பெறுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலங்கள் சார்பாக ஆட்டம் நடை பெறும் இந்த போட்டிகளில் விளையாட ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த அணியும், இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களையும்  லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் எடுத்து ஆடி வருகிறது.

பொதுவாக ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவு, தென்னாப்பிரிக்கா நாட்டு அணிகளின் வீரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டுமே கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக அளவிலான சம்பளம் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்திய அணிகளில் சேர்ந்து விளையாட வெளிநாட்டு வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் பெரும் வரவேற்பு உள்ளது.  இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு மாநில அணிகள் சார்பில் வீரர்கள் ஏலம் நடைபெறுவது உண்டு. இதில் வீரர்களின் திறமைக்கு ஏற்ப விலை கொடுத்து குறிப்பிட்ட அணிகள் வாங்கி வருகின்றன. இந்த விலையில்  ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில், உலகில் விளையாடப்படும் எந்த விளையாட்டிலும் ஒரு சீசனுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தைவிட, ஐ.பி.எல் போட்டியில் ஒரு ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

சாதாரணமாக ஆட்டத்திற்காக அவர்கள் பெறும் சம்பளத்தை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர்கள் பெறும் சம்பளம் பல மடங்கு உயர்வானது.

விளையாட்டு போட்டிகளில், மிகவும் பிரசித்தி பெற்ற  என்.பி.ஏ கூடைப்பந்து, ஐரோப்பிய கால்பந்து லீக், என்.எஃப்.எல் ஆகிய போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐபில் போட்டிகளில் விளையாடும் வீரர்களே அதிகம் சம்பாதிப்பது தெரிய வந்ததுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில்  விளையாடும் ஒவ்வொரு வீரரும்,  சராசரியாக ரூ.2.20 கோடி அளவு சம்பாதிப்பதாகவும், வெகுமதி உள்பட மற்ற வழிகளில் ரூ.2.47 கோடி கிடைக்கிறது என்றும் ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

அதேவேளையில் பிரபலமான  இங்கிலீஷ் ப்ரிமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் வீரருக்கு சராசரியாக  ரூ.70 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. அதுபோல தேசிய கால்பந்து லீக்கில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு ரூ.1.24 கோடி கிடைக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.