ஐபிஎல்: டில்லி அணி 181 ரன் குவிப்பு

டில்லி:

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய 2வது ஆட்டத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டில்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் டில்லி அணி 4 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.