ஐபிஎல்: மும்பைக்கு எதிராக டில்லி 174 ரன்கள் குவிப்பு

டில்லி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் டில்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் – அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற டில்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் பேட்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் 174 ரன்களை டில்லி அணி எடுத்தது.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.