ஐ.பி.எல்.:  டில்லியை வென்றது புனே

crik

 விசாகப்பட்டினம் : டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் புனே அணி வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடந்த 9வது ஐ.பி.எல்., லீக் போட்டியில், டில்லி –  புனே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற புனே கேப்டன் தோனி டில்லி அணியை பேட்டிங் செய்ய அழைததார்.

புனே அணியைச் சேர்ந்த டிண்டா சிறப்பாக பந்து வீசினார். இவரது வேக பந்து வீச்சில்  குயின்டன் (2), ஸ்ரேயாஷ் (8)  ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதே போல ஜாம்பாவின் சுழல் பந்து வீச்சில்  சாம்சன் (10), ரிஷாபா (4)  ஆகியோர் ஆட்டமிழந்தனர். டில்லியின் கருண் நாயர் 41 ரன்கள் எடுத்தார்.

முடிவில் டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது. கிறிஸ் மோரிஸ் (38), கூல்டர் நைல் (2) ஆட்டம் இழக்காமல்   இருந்தனர்.

122 ரன்கள் என்ற எளிய இலக்கை கொண்டு புனே அணி களம் இறங்கியது.   ஆனால் அந்த அணியின் கவாஜா (19) குறைந்த ரன்களில் அவுட் ஆனார். இந்த  அணி 8.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.  மீண்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் போட்டி ஆரம்பித்தத.  ஷமி பந்தில் ரகானே ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் மழை வர, ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது புனே அணி 11 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.

மழை தொடர்ந்து பெய்ததால்  ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி புனே அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ரகானே (42), பெய்லி (8) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Delh, IPL, Pune, ஐ.பி.எல், டில்லி, புனே, விளையாட்டு sports
-=-