மும்பை:

11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் ஓவரை தீபக் சஹார் வீசினார். இதுல் ஐதராபாத் அணி 6 ரன்கள் சேர்த்தது. 2வது ஓவரை நிகிடி வீசினார். இதில் 5வது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 2 ஒவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்தது.

3-வது ஓவரை மீண்டும் சஹார் வீசீனார். இதில் 3 ரன்களை மட்டுமே ஐதராபாத் எடுத்தது. 4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் வில்லியம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது.

6 வது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. 18வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. 19வது ஓவரில் 168 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20வது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.