ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 175 ரன் இலக்கு

கொல்கத்தா:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் -அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணியில் மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார்.

20 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 174 ரன்களை ஐதராபாத் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து 175 ரன்கள் இலக்கு என்ற நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: IPL: hyderabad fix 175 runs target for Kolkata, ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 173 ரன் இலக்கு
-=-