கொல்கத்தா:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் -அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணியில் மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார்.

20 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 174 ரன்களை ஐதராபாத் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து 175 ரன்கள் இலக்கு என்ற நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இறுதி போட்டிக்கு ஐதராபாத் தகுதி பெற்றது. இதையடுத்து வரும் 27ம் தேதி மும்பையில் நடக்கும் இறுதி போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன.