7விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோற்ற மும்பை!

--

IPL: Hyderbad beat Mumbai by 7 wickets

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி அபாரமாக வென்றது.

ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில், மும்பை, ஐதரபாத் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது ஐதராபாத் அணி.

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல், சிம்மன்ஸ் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. முகமது நபி வீசிய போட்டியின் 2வது ஓவரில் சிம்மன்ஸ் (1) அவுட்டானார். இளம் வீரர் ராணா (9), வந்த வேகத்தில் கிளம்பினார்.

இருப்பினும், பதற்றம் அடையாத பார்த்திவ், சிராஜ் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்த முயன்றார். இவர், 23 ரன்னுக்கு, வார்னரின் அசத்தல் ‘கேட்சில்’ திரும்ப நேரிட்டது.

பின் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா இணைந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் 10 ஓவரில் 59/3 ரன்கள் என, ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. ஹென்ரிக்ஸ் வீசிய 13வது ஓவரில் ரோகித், 3 பவுண்டரிகள் அடித்த நேரத்தில், ஹர்திக் பாண்ட்யா (15) ‘பெவிலியன்’ திரும்ப நேரிட்டது.

பொறுப்பாக ஆடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்தார். புவனேஷ்வர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் (67), சித்தார்த் கவுல் பந்தில் போல்டானார். இதன் பின் அணியின் ஸ்கோர் உயரவே இல்லை. புவனேஷ்வரின் கடைசி ஓவரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போலார்டு (5), கரண் சர்மா (5) சிக்கினர்.