பிஎல் 10 வது சீசன் கிரிக்கெட் போட்டியில், விக்கெட்டுகளை இழக்காமல், குஜராத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐபிஎல் இருபதுக்கு இருபது 10-வது சீசன் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 47 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 ஓவரில் விக்கெட் இழப்பில்லாமல் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் காம்பிர் 76 ரன்கள் எடுத்தார். இதேபோல் லயன் 93 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் வெற்றியை ஈட்டி உள்ளது.