கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று : ஐ.பி.எல். போட்டி ரத்து

 

கொல்கத்தா ஃநைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த அணியை சேர்ந்த இந்திய வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த பேட் கம்மின்ஸ் மற்றும் பென் கட்டிங்ஸ் ஆகிய இரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடப்பதாக இருந்த போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு தள்ளிவைக்கப்படும் முதல் போட்டி இது என்பதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.