ஐபிஎல்: டில்லியிடம் மும்பை தோல்வி…ப்ளே ஆப் சுற்று பறிபோனது

டில்லி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் டில்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் டில்லி டேர்டெவில்ஸ் – அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டில்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் பேட்டிங் தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் 174 ரன்களை டில்லி அணி எடுத்தது.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால், மும்பை அணி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆப் வாய்ப்பையும் மும்பை அணி இழந்துள்ளது.