துபாய்

பிஎல் விளையாட்டு வீரர் ஒருவர் தமக்குத் தெரிந்தவர் ஒருவர் விவரங்க்ள் சேகரிக்க சந்தேகத்துக்கு உரிய முறையில் தம்மை அணுகியதாக புகார் அளித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் மேச் ஃபிக்சிங் (சூதாட்டம்) நடைபெற்றுள்ளதாக எற்கன்வே விசாரணைகள் நடந்துள்ளன.  இவ்வாறான சூதாட்டத்துக்குத் துணை போனதாக முன்பு வீரர் ஸ்ரீசாந்த் ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு வருடங்களுக்கு  விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.

தற்போது ஐபிஎல் 2020 விளையாட்டுப் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன.  இந்த போட்டிகளில் யாரும் சூதாட்டம் அல்லது ஊழலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக ஊழல் தடுப்புக் குழு மூன்று அணிகளாகப் பிரிந்து துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் தங்கி உள்ளனர்.  இந்த போட்டி தொடங்கும் முன்னரே இந்தக் குழு தலைவர் அஜித் சிங் விளையாட்டு வீரர்களுக்கு எச்சரிக்கை விட்டிருந்தார்.

 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அந்த எச்சரிக்கையில் “சமூக வலைத் தளங்கள் மூலம் பலரும் வீரர்களைத் தொடர்பு கொண்டு விவ்ரங்க்ள் சேகரிக்க முயல்வார்கள்.  அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  சில வேளைகளில் அவை ஒரு விசிறியின் அறியாமையில் எழுந்த விசாரணையாகவும் இருக்கலாம்.  ஆனால் அவற்றுக்கும் பதில் அளிக்காமல் இருக்க வேண்டும்” என  கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில்  ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ஒரு வீரர் தமக்குத் தெரிந்த ஒருவர் சமூக வலைத் தளங்கள் மூலம் தம்மை  அணுகி அணிகளைப் பற்றிய விவரங்களை தம்மிடம் கேட்டது சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக குழுவிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.   புகார் அளித்த வீரரிடம் இருந்து குழு அறிக்கை ஒன்றை விரைவில் பெற உள்ளது.

தமக்கு தெரிந்தவராக இருந்தும் இவ்வாறு அணுகியது குறித்து புகார் அளித்த வீரரைப் பாராட்டிய குழுத் தலைவர் இந்த விவரங்களின் மூலம் வீரரை அணுகியவர் பந்தயம் அல்லது சூதாட்டத்தில் ஈடு பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   விளையாட்டு வீரர் தம்மை அணுகியவர் மீட்து சந்தேகம் கொண்டதால் விவரங்கள் அளிக்க மறுத்து புகார் அளித்துள்ளதாகவும் விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் குழு தெரிவித்துள்ளது.