ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – கடைசி இடத்திற்கு சென்று ஹாயாக அமர்ந்த சென்னை அணி!

துபாய்: தற்போதைய நிலவரப்படி, 13வது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தோனியின் சென்னை அணி.

இதுவரை தான் ஆடிய 10 போட்டிகளில், 3 வெற்றிகளை மட்டுமே பெற்று, 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது சென்ன‍ை அணி.

கேப்டன் தோனியே இத்தொடரில் சென்னை அணிக்கு பெரிய பாரமாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ, பெயருக்கு வந்து விளையாடுவது போலவே அவர் ஆடிவருகிறார்.

இதுவரை கடைசி இடத்தில் இருந்துவந்த பஞ்சாப் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 7 போட்டிகளில் வென்று மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது டெல்லி அணி.

மும்பை அணி 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அதே 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

You may have missed