ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – முதலிடத்தில் டெல்லி; ஆறாமிடத்தில் அசையாமல் நீடிக்கும் சென்னை அணி!

அபுதாபி: ஐபிஎல் தொடரில் இதுவரையான நிலவரப்படி, டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த 9 ஆட்டங்களில் ஆடி 7இல் வென்று மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மும்பை அணி 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.

சென்னை அணி வெறும் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஐதராபாத் அணி 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், பஞ்சாப் அணி 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளன.