ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி; 2வது இடத்தில் பெங்களூரு

ஷார்ஜா: 13வது ஐபிஎல் தொடரின் இன்றைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில், மும்பை முதலிடத்திலும், பெங்களூரு அணி இரண்டாமிடத்திலும் உள்ளன. இதுவரை 5 தோல்விகளை சந்தித்த டெல்லி அணி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

13வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள், கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள், தலா 12 புள்ளிகளுடன் முறையே 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன.

தலா 10 புள்ளிகளைப் பெற்ற ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள், முறையே 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. 8 புள்ளிகளை மட்டுமே பெற்ற தோனியின் சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.