அபுதாபி: 13வது ஐபிஎல் தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் மும்பையும், ஆறாவது இடத்தில் சென்னையும் உள்ளன.
அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் 13வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மும்பையும் டெல்லியும் தலா 10 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதும், ரன் ரேட் அடிப்படையில் மும்பை முதலிடத்திலும், டெல்லி இரண்டாமிடத்திலும் உள்ளன.
அதேசமயம், அதே 10 புள்ளிகளைப் பெற்ற கோலியின் பெங்களூரு அணி, ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கியதால் மூன்றாமிடத்தில் உள்ளது. 8 புள்ளிகள் பெற்ற கொல்கத்தா நான்காமிடத்தில் உள்ளது.
சென்னையும் ஐதராபாத்தும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி ஐந்தாமிடத்திலும், சென்னை ஆறாவது இடததிலும் உள்ளன. ஒரேயொரு போட்டியில் மட்டும் வென்று 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பஞ்சாப் கடைசி இடத்தில் உள்ளது.