ஐபிஎல்: கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

இந்தூர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இதையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியில் இந்த தோல்வியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி மட்டுமே தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.