மும்பை,

10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ந்தேதி தொடங்க இருக்கிறது.  போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த 10வது ஐபிஎல் போட்டியில், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை பெற்ற  ஐதராபாத் சன் ரைசருடன்,  பெங்களூரு ராயல் சேலஞ்சஸ் அணி மோதுகிறது. போட்டி  இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்.6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஐபிஎல் போட்டிக்காக  இந்தூர் உள்பட 10 நகரங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அதாவது மே 21-ந்தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த ஐபிஎல்லில்  8 அணிகள் பங்கேற்க உள்ளன.  ஒவ்வொரு அணியும்  உள்ளூர் மற்றும்  வெளியூர் அடிப்படையில் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் 4 ஆட்டங்கள் மாலையில் (4 மணி) தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.