ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து: ராஜீவ் சுக்லா அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வாரம் காலம் கழித்து மீண்டும் நடைபெறும்  பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா  தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் உச்சம்பெற்றுள்ளது. இதன் பாதிப்புக்கு பல ஐபிஎல் வீரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொற்று அதிகரிப்பு காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி சொந்த நாடுகளுக்கு சென்றனர்.

இதற்கிடையில்  கொல்கத்தா ஃநைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த  இந்திய வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நேற்று நடைபெற் இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் உள்ள  3 பேர் உள்பட கோட்லாவில் 5 மைதான வீரர்கள்  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, நாளை நடைபெற இருந்த சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையேயான போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார். ஐபிஎல் போட்டிகளை வேறு பகுதிகளுக்கு மாற்றப்படும் என்றும், அதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வார காலத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.