ஐபிஎல் புள்ளிப் பட்டியல் – 5வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் அணி

துபாய்: ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் தற்போதைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் அணி. முதலிடத்தில் மும்பை அணி நீடிக்கிறது.

டெல்லி & பெங்களூரு அணிகள், மும்பையைப் போலவே 14 புள்ளிகள் பெற்றிருந்தபோதும், ரன் ரேட் அடிப்படையில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

மொத்தம் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது கொல்கத்தா அணி. எழுச்சி கண்டு, தொடர்ந்து நான்காவது வெற்றியை ஈட்டியுள்ள பஞ்சாப் அணி, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் போட்டிக்கு, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே கடும் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள், முறையே, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன.