ஐபிஎல் இன்று – சென்னை vs பெங்களூரு மற்றும் மும்பை vs ராஜஸ்தான்

துபாய்: அக்டோபர் 25ம் தேதியான இன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை – பெங்களூரு அணிகளும், ராஜஸ்தான் – மும்பை அணிகளும் மோதுகின்றன.

பிற்பகல் 3.30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், பெங்களூரை சந்திக்கிறது சென்னை அணி. தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி, மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூருவை சந்திக்கிறது.

ஏற்கனவே இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி வென்றிருந்தது. இன்றையப் போட்டியில் சென்னை அணி வென்றாலும் எந்தப் புண்ணியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 7.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே, இரு அணிகளுக்கும் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வென்றிருந்தது. தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை அணி.