ஐபிஎல் இன்று – டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்

துபாய்: நடப்பு 13வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 30வது போட்டியில், துபாய் மைதானத்தில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாமிடத்தில் உள்ளது.

வெற்றிபெற வேண்டிய நெருக்கடி டெல்லியைவிட ராஜஸ்தானுக்கு அதிகமுள்ளது. ஏற்கனவே, இரு அணிகளும் மோதிய போட்டியில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது.

எனவே, ராஜஸ்தான் அந்த தோல்விக்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.