ஐபிஎல் தொடரில் இன்று – துபாயில் டெல்லி vs ஐதராபாத் போட்டி

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணியளவில், துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடந்தப் போட்டியில், ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி இரண்டாமிடத்திலும், ஐதராபாத் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன. ஐதராபாத் அணி இன்றையப் போட்டியை வென்றாலும், அரையிறுதிக்குச் செல்வது சந்தேகமே!

அதேசமயம், டெல்லி அணி இன்னும் ஒருபோட்டியில் வென்றாலும்கூட, அரையிறுதி வாய்ப்பை கட்டாயம் உறுதிசெய்து கொள்ளும்!