ஐபிஎல் இன்று – துபாயில் டெல்லி vs மும்பை & ஷார்ஜாவில் பெங்களூரு vs ஐதராபாத்

ஷார்ஜா: 13வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டிகளில், டெல்லி – மும்பை மற்றும் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

துபாய் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியுடன் மோதுகிறது மும்பை. இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில் மும்பை முதலிடத்திலும், டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் துவங்கும் மற்றொரு ஆட்டத்தில், பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன்களில் வென்றிருந்தது.

புள்ளிப் பட்டியலில் தற்போதைய நிலையில், பெங்களூரு இரண்டாமிடத்திலும், ஐதராபாத் ஏழாவது இடத்திலும் உள்ளன.

 

You may have missed