ஐபிஎல் இன்று – அபுதாபியில் ஐதராபாத் & கொல்கத்தா மற்றும் துபாயில் மும்பை & பஞ்சாப்

துபாய்: ஐபிஎல் தொடரில் இன்றையப் போட்டியில், ஐதராபாத் – கொல்கத்தா அணியும், மும்பை – பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

ஐதராபாத் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, பிற்பகல் 3.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை – பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.