ஐபிஎல்: இன்று இரண்டு போட்டிகள்

IPL: today matches

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மே 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன.

முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஹைதராபாத்துடன் பெங்களூர் அணி மோதியது. இதில் ஹைதராபாத் அணி வென்றது. அடுத்த ஆட்டத்தில் மும்பை, புனே அணிகள் மோதின. இதில் புனே வென்றது. நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதின. கொல்கத்தா வென்றது. இதையடுத்து இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் புனே அணியும் இந்தூரில் இன்று மோதுகின்றன. மாலை நான்கு மணிக்கு இந்தப் போட்டித் தொடங்குகிறது. இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.