ஐபிஎல் தொடர் – இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் vs பெங்களூரு மற்றும் சென்னை vs டெல்லி

--

ஷார்ஜா: 13வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில், ராஜஸ்தான் – பெங்களூரு அணிகளும், சென்னை – டெல்லி அணிகளும் மோதுகின்றன.

பிற்பகல் 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டெல்லி – சென்னை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே, இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில், டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியிருந்தது.

தனது முந்தையப் போட்டியில், ஐதராபாத்தை சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றி இன்னும் தொடர வேண்டுமென்பதே சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.