ஐ.பி.எல்-க்கு ஆப்பு: மகாராஸ்திராவில் மே 1 முதல் தடை!

 

மே 1 முதல் ஐ.பி.எல் போட்டி மகாராஸ்திராவில்  இருந்து இடமாற்றம்

IPL WATER CRISIS

வறட்சியில் விவசாயிகள் மடியும் போது, மகாராஸ்திராவில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறக் கூடாது என சமூக ஆர்வலர்கள் போராடி வந்தனர்.இது குறித்து பத்திரிக்கை.காமில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தோம்.

படிக்கவும்:

வறட்சி நிலவும் போது ஐ.பி.எல். அவசியமா ?

நூறு கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும்

ஐ.பி.எல். தடை வறட்சியை போக்கிவிடுமா ?

மகாராஸ்திராவில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா என நிலவி வந்த குழப்பத்திற்கு விடிவு ஏற்பட்டு உள்ளது.

போட்டிக்கு தடை கோரிய சமூக ஆர்வலர்கள் மற்றும் போட்டியை நடத்தும் பி.சி.சி.ஐ இருவருக்கும் பொதுவாக ஒரு தீர்ப்பினை மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30 க்கு பிறகு மகாராஸ்திராவில் நடைபெற  திட்டமிட்ட ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற  பி.சி.சி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து மே ஒன்று முதல்  நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேறு மைதானத்தைத் தேட வேண்டும்.

இதன் மூலம் இறுதிப்போட்டி உட்பட 13 போட்டிகள் மகாராஸ்திராவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

பி.சி.சி.ஐ- செயலாளரும் இந்திய பாராளுமன்ற எம்.பி.யுமான அனுராக் தாகூர் “நாங்கள் குடிதண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. போட்டிகலை இடமாற்றுவது பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிபாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் புதிய அணியான  பூனே அணிக்கு வியாபாரத்தை பாதிக்கும். இர்ண்டு அணிகளும் தலா 5 கோடியை வறட்சி பாதித்த கிராமங்களுக்கு  நன் கொடை வழங்க உறுதியளித்துள்ளன.

 

IPL SHIFT 100 CRORE

இடமாற்றம் செய்யப்பட வுள்ள போட்டிகள்:

மும்பை வாங்கடே அரங்கம:  மே 8, 13, 15 மற்றும்மே  29 இறுதிப் போட்டி;

பூனே மைதானம்:   எலிமினேட்டர் என் விளிக்கப்படும்  நீக்கப் போட்டி (மே 25) மற்றும் தகுதிபோட்டி(மே 27)  உட்பட ஒன்பது போட்டிகள்

நாக்பூர் :   கிங்க்ஸ் எலெவன் பஞ்சாப் அணியின் இரண்டாம் தாயகமானஇங்கு மே 7, 9 மற்றும் 15 தேதிகளில் போட்டி நடைபேற இருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL-2016-Schedule