சென்னை:

பிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 161 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக  சிஎஸ்கே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில்   டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன்  வெளியேறினார். அதைத்தொடர்ந்து,  டுபிளசிஸ் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 56 ஆக இருக்கும்போது வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார். டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தால் 38 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேற தோனி களமிறங்கினார். இறுதியில்,  20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே அணி  160 ரன்களை எடுத்துள்ளது. டோனி 37 ரன்களுடனும், ராயுடு 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல்  இருந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் இறங்கினர். வந்த வேகத்தில் ஹர்பஜனின் சூழலில் முதல் ஓவரிலேயே இருவர்  5 ரன்னில் வெளியேற அதைத்தொடர்ந்து சர்ப்ராஸ் கான் களமிறங்கினார். அவரும் ராகுலும் நிதானமாக ஆடி வந்தனர். இதன் காரணமாக ரன்கள் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்ரலை. . இருவரும் சேர்ந்து  117 எடுத்திருந்த நிலையில், ராகுல் 55 ரன்னில் வெளியேறினார். கடைசியில் சர்ப்ராஸ் கான் 67 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன், குகலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்றைய வெற்றி காரமாக சிஎஸ்கே  அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது.