ஐபிஎல்2019: பெங்களூரை வீழ்த்தி 16ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

கொல்கத்தா:

பிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் விராட்கோலி தலைமை யிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர்  தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில், 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி  கொல்கத்தா, பெங்களுரு அணிகளுக்கு இடையே டெல்லி  பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில்  ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக  டெல்லி அணியின் தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அணியின் ஸ்கோர் 3.3 ஓவரில் 35 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியான  ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மைதானத்தில் ரசிகர்கள் தொடர்ந்த கரகோஷம் எழுப்பி உற்சகப்படுத்தினர்.

தவான் 37 பந்தில் 50 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 52 ரன்களும் சேர்த்து ஆட்ட மிழந்தனர். அதன்பின் வந்த ரிஷப் பந்த் 7 ரன்னிலும், கொலின் இங்க்ராம் 11 ரன்னிலும் வெளியேற தொடர்ந்து ருதர்போர்டு களமிறங்கினார். அவரது அதிரடி ஆட்டத்தில்,  கடைசி இரண்டு ஓவர்களில் டெல்லி 36 ரன்கள் எடுக்க  20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.

ருதர்போர்டு 13 பந்தில் 3 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணியில் சாஹல் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து  188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமறங்கி யது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்திவ் பட்டேலும் களமிறங்கினார். கோலி நிதானமாக ஆட பார்தீவ் பட்டேல் அதிரடியாக ஆடி வந்தார். இதன் காரணமாக  5.5 ஓவரில் 63 ரன் எடுத்திருந்தபோது, பார்திவ் பட்டேல் வெளியேறினார். அவர், பட்டேல் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து விராட் கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ரனனில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய  டுபே 16 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் வேண்டும் நிலையில் குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 19 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா பந்து வீசத் தொடங்கினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில், ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது.

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது.  இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.