ஐபிஎல்2019: சன் ரைசர்ஸ் அணியை அதிர வைத்த மும்பை பவுலர்கள்…. 40ரன் வித்தியாசத்தில் வெற்றி…

ஐதராபாத்:

பிஎல் தொடரின் 19வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு ஆட்டம்  தொடங்கியது.

இந்த ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது.

ஆட்டத்தின்போது, டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக மும்பை மட்டையுடன் களமிறங்கியருது.  மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் இறங்கினர். அவர்களால் சன் ரைசர்ஸ் பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர்.

ரோகித் சர்மா 11 ரன்னில் வெளியேற தொடர்ந்து குயிண்டனும் 19 ரன்னில் வெளியேறினார்.  தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார், இஷான், குருணால் பான்டியா ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேற மும்பை அணி தடுமாறியது. மும்பை 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  ஹர்திக் பாண்டியா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் சாஹர் 10 ரன்னில்  வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய பொலார்டு சற்று நின்று ஆடத் தொடங்கினார். இதன் காரணமாக  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை மட்டுமே மும்பை அணி  எடுத்துள்ளது. பொல்லார்ட் 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், மொகமது நபி, சந்தீப் சர்மா, ரஷித் கான், புனவேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது.  ஐதராபாத் அணி எளிதில் வெற்றி பெற்றும் விடும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், மும்பை அணியின் பவுலர்களின் பந்து வீச்சில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள்  சுருண்டனர். 17.4  ஓவருக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

தொடக்க ஆட்டக்காரராக  வார்னரும், ஜானியுடம்க களமிறங்கினர்.   தொடக்கத்தில் டேவிட் வார்னர் அதிரடியாக ஆட்டத்தை காட்டினார். 2 பவுண்டரி அடித்து ரசிகர்களிடையே விறுவிறுப்பை ஏற்றிய நிலையில், 13பந்தில் 15 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஜானி யும் 16 ரன்னில் வெளியேற தொடர்ந்து ஒவ்வொரு விக்கெட்டாக மளமளவென சரிந்தனர்.

விஜய்சங்கர் 5 ரன்னிலும், மனிஷ் பாண்டே 16 ரன்னிலும், தீபக் ஹுடா 20 ரன்னிலும், யூசுப் பதான் 0 ரன்னில் வெளியேறினர். இதன் காரணமாக ஆட்டம் சுறுசுறுப்பு இல்லாமலே சென்றது. ஐதராபாத் ரசிகர்கள் சோகமாகவே காணப்பட்டனர். தொடர்ந்து இறங்கிய முகமது நபி, ரஷித்கான், புவனேஷ் குமாரும் சித்தார் கவுல் ஆகியோர் ஒருசில ரன்களிலேயே வெளியேற ஐதராபாத் அணி படு தோல்வியை சந்தித்தது.  17.4 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில், அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

மும்பை அணியின்  வேகப்பத்து வீச்சாளர்  அல்ஷாரி ஜோப் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்டு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.