ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி: 2019 ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி

மொகாலி:

ந்த ஆண்டுக்கான  (2019)  ஐபிஎல் போட்டியில் பெங்களூ அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. பஞ்சாப் அணியை  8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது பெங்களூரு.

இந்த போட்டியில் ஆடி விராட்கோலி ரன்கள் குவித்தன் மூலம் டி20 ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி நேற்று இரவு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பஞ்சாபில் உள்ள மொகாலி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் மட்டையுடன் களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக  கிறிஸ் கெயில், லோகேஷ் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதலே சூடுபிடித்தது. கெயில் பெங்களூரு பவுலர்களின் பந்தை நாலா புறமும் அடித்து தூள் பறத்தினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 6 ஓவரிலே 60 ரன்களை கடந்தது.

இதற்கிடையில், லோகேஷ் ராகுல் 18 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 15 ரன்களோடும் சஹல் பந்தில் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி  கடைசி கட்ட ஓவர்களில் கிறிஸ் கெயிலும்-மந்தீப் சிங்கும் இணைந்து ரன்களை சேகரித்தனர். இறுதியில் பஞ்சாப் அணி. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது

கெயில் அபராதமாக ஆடி வந்தார். அவர் செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 99 ரன்னில் ஆட்டம் முடிந்தது. கிறிஸ் கெயில் 28 பந்துகளில் தனது 27-வது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார்.  அவர் 64 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரியுடன்  99 ரன்களை குவித்த கெயில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். கெயில் 99, மந்தீப் சிங் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு தரப்பில் சஹல் 2-33, சிராஜ், மொயின் அலி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

174 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி-பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர். கடந்த அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி பந்த பெங்களூஅணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் ஆவேசமாகவும், பொறுப்புடனும் ஆடியது.

இந்த நிலையில், அஸ்வின் பந்தில் பார்த்திவ் 19 ரன்களுடன் வெளியேற  பின்னர் கோலி-டி வில்லியர்ஸ் இணைந்து, அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக 8-வது ஓவரில் பெங்களூரு ஸ்கோர் 74-ஐ கடந்தது. கேப்டன் விராட் கோலி தனது 36-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 37 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். 8 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 67 ரன்களை விளாசிய கோலி, ஷமி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியறினார்.

தொடர்ந்து சிறப்பாக அபாரமாக ஆடி வந்த டி வில்லியர்சும், 31-வது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் 1 பவுண்டரி, 2 ரன்களை எடுத்து பெங்களூரு அணி சிறப்பான வெற்றி பெற்றது.    2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 59 ரன்களுடன் டி வில்லியர்ஸ், 4 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்த ஸ்டாய்னிஸும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.  19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு 174 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப் தரப்பில் ஷமி, அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

டி20 ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என சுரேஷ் ரெய்னா படைத்திருந்த சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

இதுவரை பெங்களூரு அணி ஆடிய 6 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்த நிலையில், முதலாவது வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.