ஐ.பி‌‌.எல்.2020-க்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்! கங்குலி

டெல்லி: ஐ.பி‌‌.எல். 2020 போட்டிக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.

ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகம் நாடுகளான  துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில்   நடைபெறவுள்ளன. இதையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு பயணம் மேற்கொண்டு அங்கு தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு தற்போது பயிற்சி ஆட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிஎஸ்கே அணி வீரர்களுக்கு தொற்று உறுதியாக தற்போது, குணமாகி உள்ளதால், நாளை முதல் பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல்2020 தொடர் இந்த மாதம் 19ம் தேதி போட்டி தொடங்கி நவம்பர் 10ம் தேதி முடிவடைய உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி,  ஐபிஎல் 2020ன் அட்டவணை  நாளை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதன்மூலம் எந்தபோட்டி எங்கு நடக்கும், முதல்போட்டி எந்த அணிகளுக்கு இடையே  நடக்கும், எந்தப் போட்டிகள் பிற்பகலில் நடக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.