ஐபிஎஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரம்: சபீர் கரீம் ஐபிஎஸ் அதிரடி பதவி நீக்கம்

டில்லி:

பிஎஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரம் தொடர்பான விசாரணையை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம்  பதவியில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஐபிஎஸ் எழுத்து தேர்வின்போது, காப்பியடித்ததாக ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சம் மற்றும் யுஜிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரள மாநிலத்த சேர்ந்தவரா சபீர் கரீம் இவர் 2015 -ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதினார். தர வரிசையில் 112-வது இடத்தை மட்டுமே பிடித்திருந்த ஷபீர், பயிற்சிக்கு பிறகு காவல்துறை கண்காணிப்பாளராக  பணியாற்றி வந்தார்.  தொடர்ந்து மீண்டும் கடந்த (2017)ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் தேர்வையும் எழுதினார். சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற தேர்வின்போது ஷபீர் காப்பிடியடித்து தேர்வு எழுதுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அறையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷபீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஷபீர் தேர்வு எழுத அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து ஷபீர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவரகள்  3 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அப்போது ஷபீர் தனது சட்டைப்பையில்  காமிராவும் , ப்ளூ டூத் கருவியும் பொருத்தியிருந்தது தெரிய வந்தது.  காமிரா மூலம் விடைத்தாளை அவரது மனைவிக்கு அனுப்பி அதற்கான விடைகளை நிரப்பியதும் தெரிய வந்தது. விசாரணை முடிந்து அறிக்கை மத்திய உள்துறையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய  உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் , யுபிஎஸ்சி தேர்வாணைய குழுவினர் ஆகியோர்  ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து,  சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தேர்வில் காப்பியடித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது..