ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம்

 

சென்னை:

தமிழக காவல்துறை அதிகாரிகள் 12 பேருக்கான பதவி உயர்வு, இடமாற்றம் பற்றிய ஆணைகளை தமிழக அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா  பிறப்பித்துள்ளார்.

download (1)

அவற்றின் விவரம்:

  1. தூத்துக்குடி சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் டாக்டர் அருண் சக்தி குமார் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு. மதுரை நகர சட்டம் ஒழுங்கு பிரிவு டி.சி.யாக நியமனம். 2. கமுதி சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு. மதுரை அமல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக  திருமதி. எஸ்.என். உமையாளுக்குப் பதிலாக நியமனம்.
  1. செங்கல்பட்டு சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் ஜியார்ஜி ஜியார்ஜ் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு. சேலம் சட்டம் ஒழுங்கு பிரிவு டி.சி.யாக எஸ். செல்வராஜ் இடத்தில் நியமனம்.
  2. தூத்துக்குடி ரூரல் சப் டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்ட் டாக்டர் எஸ். தீபா கணிஜெர் ஐ.பி.எஸ். போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு. சென்னை வீடியோ பைரஸி போலீஸ் சூப்பிரண்டாக திருமதி. எச். ஜெயலட்சுமி இடத்தில் நியமனம்.
  3. திருமதி. எஸ். என். உமையாள் மதுரை அமல் பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் பட்டாலியன் திருச்சியில் திருமதி. விஜயலெட்சுமி ஐ.பி.எஸ். இடத்திற்கு கமாண்டென்ட்டாக நியமனம்.

6 .தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் பட்டாலியன் திருச்சி கமாண்டென்ட்டான        எம். விஜயலெட்சுமி ஐ.பி.எஸ். சென்னை சமூக நலம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம்.

  1. ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 11வது பட்டாலியன், கமாண்டென்ட் ஆர். சின்னசாமி ஐ.பி.எஸ். திருப்பூர் நகர போலீஸ் தலைமையகத்தில் டி.சி.யாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம்.

8 . சேலம் நகரம் . சட்டம் ஒழுங்கு பிரிவு டி.சி. எஸ். செல்வராஜ் மதுரை திருப்பூர் நகர போலீஸ் தலைமையகத்தில் டி.சி.யாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம்.

  1. சென்னை வீடியோ பைரஸி போலீஸ் சூப்பிரண்ட் திருமதி. எச். ஜெயலட்சுமி சென்னை மத்திய சரகம் லஞ்சத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக, தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம்.
  2. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்ட திருமதி. பி. கண்ணம்மாள் போலீஸ் சூப்பிரண்ட் சென்னை போலீஸ் தலைமையகத்தில் திருமதி. பி.ஆர். வெண்மதி ஐ.பி.எஸ். இடத்தில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸாக நியமனம்.
  3. சென்னை போலீஸ் தலைமையகத்தில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸாக உள்ள திருமதி. பி.ஆர். வெண்மதி ஐ.பி.எஸ். தமிழ்நாடு கமாண்டோ போலீஸ் பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக தற்போது உள்ள காலி இடத்தில் நியமனம்.
  4. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்ட திருமதி. வந்திதா பாண்டே போலீஸ் சூப்பிரண்ட், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை 11வது பட்டாலியன் கமாண்டென்ட்டாக ஆர். சின்னசாமி ஐ.பி.எஸ். இடத்தில் நியமனம்.

 

Leave a Reply

Your email address will not be published.