சென்னை,

மல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் புளுடூத் இயர்போன் மூலம் பரிட்சை எழுதி தேர்ச்சி பெறுவார். அதுபோல இன்று நடைமுறையில் காப்பி அடித்து தேர்வு எழுத முயன்ற ஐபிஎஸ் அதிகாரி பிடிபட்டார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ் அதிகாரி மாட்டிக்கொண்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் வகையில் அதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டவர்களில்  13,350 பேர் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். அதைத்தொடர்ந்து  மெயின் தேர்வு இந்த மாதம் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்னையில் இன்று நடைபெறற தேர்வில்  ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் என்பவர் பிட்டு அடிக்கும்போது பிடிபட்டார். இவர்,  வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலஹாசன் தேர்வில் பிட்டு அடிப்பது போல் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதில் கேட்டு தேர்வு எழுதி வந்தார்.

இதை கண்காணித்த அதிகாரிகள் சபீர் கரீமை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து புளுடூத் மெஷின் கைப்பற்றப்பட்டது. மேலும், அவருக்கு புளுடூத் மூலம் விடைகளை அவரது மனைவி ஐதராபாத்தில் இருந்து கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது.

சபீர்கரீம் மீது ஐபிசி 420 பிரிவின்கீழ வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.