ராஜஸ்தான் தேர்தல்: முதலமைச்சரை எதிர்த்து அவரது தொகுதியில் களமிறங்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி

ராஜஸ்தான் மாநில முதலமைச்சரை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளார்.

Mukul-Choudhary-wife

இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஒருபுறம் அதிகாரிகள் ஈடுபட்டிருக்க, மறுப்புறம் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள வசுந்தரா ராஜே சிந்தியா மீண்டும் ஜல்பராதான் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி ஒருவர் முடிவெடுத்துள்ளார். இது குறித்து ஜல்பராதான் தொகுதியில் போட்டியிடும் முகுல் சவுத்ரி கூறுகையில், “ நான் ஜல்பராதான் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளேன். ஏனெனில் அங்கு தான் நான் பிறந்தேன். எனது கணவர் பங்கஜ் சவுத்ரி ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். முதலில் நான் இந்த மண்ணின் மகள், அதன்பிறகு தான் எனது கணவருக்கு மனைவி.

மாநிலத்தில் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் திறமையற்ற ஆட்சி முறையை கண்டித்து சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன். முதலமைச்சரின் ஆட்சி முறையால் மாநிலம் முழுவதும் ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை நீக்குவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளேன் ” என்று கூறினார்.