சொந்த கடற்படை கப்பலையே தாக்கிய ஈரான்…. 40 வீரர்கள் உயிரிழப்பு

ரானுக்கும், அமெரிக்காவும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரோன் தனது சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில்  ஈரான் நாட்டைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானின் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியை ஈராக் தலைநகர் பாக்தாதில் அமெரிக்கா தாக்கிக் கொன்ற விவகாரம் உலகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு பதில்டி கொடுக்கப்படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஏவுகணை தாக்குதலிலும் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாட்டு கப்பல்களும் கடல்களில் ரோந்து சுற்றி வருகின்றன.

இந்த நிலையில்,  ஈரான் நாட்டு கடற்படை கப்பல் ஒன்று தனது சொந்த கடற்படையை சேர்ந்ந மற்றொரு கப்படை தாக்கி அழித்துள்ளது. ஈரான் கடற்பகுதியில் பந்தர் இ ஜாஸ்க் என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த சுமார் 40 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் கடற்படையின் மோட்ஜ் ரக பிரிகேட் கப்பல் ஒன்று அதே கடற்படையின் கொனாராக் ரக கப்பலில் மீது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி தாக்கியழித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது எதிர்பாராதவிதமாக நடைபெற்ற விபத்தா என்பது தெரியவில்லை.