க்ரைன் விமானம் கீழே விழுந்ததற்கு ஈரானின் ஏவுகணைத் தாக்‍குதலே காரணம் – அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் தெரிவித்து வந்த நிலையில், விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக ஈரான் அரசு அறிவித்து உள்ளது.

உக்‍ரைனின் போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உக்ரேன் நாடு, விமானம் விபத்து நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், எந்தவித கோளாறும் விமானத்தில் இல்லை என்று உறுதிப்பட கூறியது.

விமானத்தின்மீது ஏவுகணைப் பாய்ச்சப்படவில்லை என்று ஈரான் கூறி  வந்த நிலையில், விமானத்தில் கருப்பு பெட்டியை தர முடியாது ஈரான் நாடு பிடிவாதம் பிடித்தது.

இதற்கிடையில்,  ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே, உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சந்தேகம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு கிடைத்த பல்வேறு உளவுத்துறை தகவல்களின்படி, உக்ரேன் விமானத்தை ஈரானே சுட்டு வீழ்த்தியதாகவும், அமெரிக்க விமானம் என நினைத்து தவறுதலாக தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இதை  அமெரிக்கவும் கூறி வந்தது.

இந்த பரபரப்பான சூர்நிலையில், உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளாதற்கான காரணம் குறித்து ஈரான் இன்று அறிவிக்கும் என்று ஈரானின் அரசாங்கச் செய்தி நிறுவனம் Fars தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  உக்ரேனிய விமானத்தை எதிர்பாராதவிதமாக சுட்டு வீழ்த்தியதாக  ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன், உக்ரேன் விமானம் வீழ்த்தப்பட்ட நாள் ஒரு சோகமான நாள்., இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் போர் அச்சத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழை, இந்த  பேரழிவிற்கு வழிவகுத்து விட்டது என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  மக்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தம், மன்னிப்பு மற்றும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறி உள்ளது.