ரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த 8ந்தேதி உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் ஈரான்  ராணுவத்தினால் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் உலக நாடுகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், விமானத்தை சுட்டு வீழ்த்தியது தாங்கள்தான் என்றும், எதிர்பாராத மனித தவறு காரணமாக, உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவித்து, மன்னிப்பு கோரியது.

இந்த நிலையில், உக்ரைன் விமானத்தை தாக்கியது,  டோர்- எம் 1 (Tor-M1 missiles)  என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக  ஈரான் சிவில் விமான அமைப்பு அதிகாரப்பூர்வமாக  தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்க இடையேயான பிரச்சினையைத் தொடர்ந்து, அமெரிக்காவானி ஆளில்லா விமானம் மூலம் ஈரானிய தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து,  இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில்,  அமெரிக்கா போர் விமானம் என நினைத்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.

அந்த விமானத்தில் பயணம் செய்த,  82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டினர் உள்பட 176 பேர் சம்பவத்தில் உயிரிழந்தனர். இது உலக நாடுகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை, விபத்து என முதலில் கூறிய ஈரான் அரசு, விபத்து குறித்து அறியும் விமானத்தின் கருப்பு பெட்டியை தர முடியாது என்று கூறியது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சில நாட்களுக்கு பிறகு,  உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக, விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக மன்னப்பு கோரியது.

உக்ரைன் விமான விபத்தில் தொடர்புடையர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார். இந்த நிலையில், தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் டோர்- எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், , ‘ஜனவரி 8 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 06:12 மணிக்கு (02:42 GMT) தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், உக்ரைன் விமானம் சுமார் 8,100 அடியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் இழந்தது. வடக்கிலிருந்து, போயிங் 737-–800 விமானத்தின் மீது இரண்டு டோர் -எம் 1 (தரை முதல் வான்வழி) ஏவுகணைகள் வீசப்பட்டன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.