அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரான் ரியால் மதிப்பு 1.28 லட்சமாக வீழ்ச்சி

டெஹ்ரான்:

அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானின் ரியால் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதைதொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து விதித்து வருகிறது. நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தம் செய்து வருகிறது.

இந்நிலையில் வெளிச்சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு இன்று வரலாறு காணாத சரிவை சந்திதுள்ளது. கடந்த மே மாதத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியால் மதிப்பு 80 ஆயிரமாக இருந்தது. தற்போது மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1.28 லட்சம் ரியால் என்னும் உச்சத்தை தொட்டுள்ளது. இது 50 சதவீதம் அதிகமாகும். இந்த நிலை நீடித்தால் டாலருக்கு எதிரான ஈரானின் ரியால் மதிப்பு 2 லட்சத்தை தொடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.