டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்கர் விழாவை புறக்கணித்த ஈரான் இயக்குனர்!

--
தி சேல்ஸ்மேன்(ஈரான்)  டைரக்டர் அஸ்கர் ஃபர்ஹதி.

லாஸ் ஏஞ்சல்ஸ்:

சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ள இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதி அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றதிலிருந்து  டிரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. விருது விழா நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜிம்மி கிம்மல்

 

சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு லேண்ட் ஆப் மைன்(டென்மார்க்), எ மேன் கால்ட் ஓவ்(ஸ்வீடன்), தி சேல்ஸ்மேன்(ஈரான்), டான்னா(ஆஸ்திரேலியா), டோனி எர்ட்மேன் (ஜெர்மனி) ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இவற்றில் இருந்து தி சேல்ஸ்மேன் என்ற படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்திய இயக்கியவர் ஈரான் நாட்டை சேர்ந்த அஸ்கர்  ஃபர்ஹதி.

ஆனால், பெருமைமிக்க இந்த விருதை வாங்க அஸ்கர் ஃபர்ஹதி லாஸ் ஏஞ்செல்ஸ் வரவில்லை. டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் விருதை நேரில் வாங்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒருசில நாட்களில்   ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

டிரம்பின் இந்த  சட்டத்தை கண்டித்தும், அவரின் மனித நேயமற்ற செயலை எதிர்த்தும், ஈரானை சேர்ந்த அஸ்கர் ஃபர்ஹதி  அஸ்கர்  ஆஸ்கர் விழாவை புறக்கணித்துள்ளார்.

அவருக்கு பதிலாக இந்த விருதை அனௌஷே அன்சாரி பெற்றுக்கொண்டார். அப்போது அவர் ஈரானை சேர்ந்த எழுதி கொடுத்தனுப்பிய கடிதத்தை மேடையில் வாசித்தார்.

அதில், இந்த விருதை இரண்டாவது முறை பெறுவதில் பெருமைப்படுகிறேன். இன்று விழாவில் கலந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். என் நாடு மற்றும் 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து மனிதநேயமற்ற சட்டத்தால் அவமதிக்கப்பட்டுள்ளனர். அந்த 7 நாடுகளை சேர்ந்தவர்களை மதித்து நான் இந்த விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may have missed