டெகரான்

மெரிக்க எதிர்ப்பை மீறி ஈரான் நாட்டில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள் 4 ஆம் முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமானி சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லபடர்.  அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்து வந்ததால் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.    இதற்காக அமெரிக்க ராணுவத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.  இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உள்ளது.

மற்ற உலக நாடுகளுக்குச் சமமாக ஈரான் விண்வெளி திட்டத்தில் சாதனை புரிய ஆசை கொண்டுள்ளது.  ஆயினும் அந்த விண்வெளி திட்டம் என்பது அணு ஆயுதங்களை தயாரிக்கும் ஒரு மறைமுக திட்டம் என அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வருகிறது.   இந்த விண்வெளி திட்டங்களுக்குத் தடை உண்டாக்க அமெரிக்கா ஈரானுக்குப் பொருளாதாரத் தடைகள் விதித்து வருகிறது.

இவற்றுக்கு இடையில் ஈரான் தனது விண்வெளி திட்டத்தைக் கைவிட வில்லை.  ஆயினும் கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஈரான் விண்ணில் தனது செயற்ககிக் கோளை செலுத்த முயற்சித்து தோல்வியில் முடிந்தது.   மூன்று முறை தோல்வியை சந்தித்த ஈரான் மீண்டும் சாபர் எனப் பெயரிடப்பட்ட புதிய செயற்கைக் கோளை நேற்று முன் தினம் விண்ணில் செலுத்தியது.

சாபர் செயற்கைக்கோள் சுற்று வட்டப் பாதையில் நுழைய முடியாததால் திட்டம் தோல்வியைச் சந்தித்தது.   ஈரான் ராணுவ அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர், “நமது செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.  இதன் மூலம் கிட்டத்தட்ட நமது இலக்கை நெருங்கி உள்ளோம்.  ஆயினும் சாபர் எதிர்பார்த்தபடி சுற்றுப் பாதையில் நுழைய முடியாமல் போனது” எனத் தெரிவித்துள்ளார்.