ஈரான் – ஈராக் எல்லையில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்! 67 பேர் பலி!


ரான் – ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 67 பேர் பலியானதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஈராக் பகுதியில் இருக்கும் குர்தீஷ் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமணியா நகரத்தை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுலைமணியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி 9.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதில் கட்டிடங்கள் ஆடின. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாக தெரியவில்லை என்றாலும் 67 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.