அதிநவீன போர் விமானத்தை பரிசோதித்து ஈரான் அதிரடி

டெக்ரான்:

ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய உலக நாடுகள் ஈரானுக்கு போர் ஆயுதங்களையும், விமானங்களையும் விற்க மறுத்து விட்டன. இந்த புறக்கணிப்புக்கு இடையில் ராணுவ பலத்தை அதிகரிக்க ஈரான் சபதம் ஏற்றது.

தேவையான போராயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன், அதிநவீன போர் விமானங்களையும் தயாரிக்க கடந்த 2013-ம் ஆண்டில் திட்டம் தீட்டியது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட ‘கவுசர்’ என்ற போர் விமானத்தை ஈரான் இன்று வெள்ளட்டோம் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்தது. இது உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்துள்ளது.