ஈரானுக்கு எதிராக போராடிய பிரிட்டன் தூதர் திடீர் கைது: சர்வதேச விதிமீறல் என கடும் கண்டனம்

டெஹ்ரான்: ஈரானில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடிய பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டார். அதற்கு பிரிட்டன் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலகம் முழுவதும் இந்த தாக்குதல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந் நிலையில், தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டது. அதனைக் கண்டித்து டெஹ்ரானில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தில், ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மேக்கைர் பங்கேற்றார். அந்த சமயத்தில் போராட்டக்காரர்களுடன் சேர்த்து பிரிட்டன் தூதரையும் பாதுகாப்பு படையினர் திடீரென கைது செய்தனர்.

பிறகு நிலைமை அறிந்து, பாதுகாப்பு படையினர் அவரை விடுவித்தது. ஈரானின் இந்த செயலுக்கு பிரிட்டன் கடும் கண்டனம் தெர்வித்து இருக்கிறது.

இதுபற்றி பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டோம்னிக் ராப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டெஹ்ரானில் தூதர் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச விதிமீறல். எந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.