தெஹ்ரான்:

ரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் மேலும் 129 பேர் உயிரிந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் மிகவும் மோசமான நாடாக ஈரான் மாறி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 130-க்கும் நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் ஒரு தொலைக்காட்சி செய்தி பேட்டி ஒன்றில் பேசிய போது, கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அவசியமின்றி வேறு மாகாணங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இந்நிலையில், ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 129 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 14 ஆயிரத்து 991 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.