டெஹ்ரான்: புதியதாக 117 பேர் கொரோனா வைரசால் உயிரிழக்க, ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 4,000 ஐ கடந்துள்ளது. அதன் காரணமாக, ரமலான் நிகழ்வுகள் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,634 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,220 ஆக உள்ளது.

இந் நிலையில் தொலைக்காட்சியில் அந்நாட்டின் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், சிறையில் உள்ள 10000 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் புனித முஸ்லீம் நோன்பு மாதமான ரமலான் மாதத்தில் நடத்தப்படும் கூட்டங்கள் தடை செய்யப்படலாம்.

உலகின் மிக மோசமான வைரஸ் தொற்றை, ஈரான் சந்தித்து வருகிறது. அதே வேளையில் தமது பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க தயாராகி வருகிறது என்றார்.